உலகம் தரக் கூடாத சமாதானம் – Ulagam Thara Koodatha Samadhanam

உலகம் தரக் கூடாத சமாதானம் – Ulagam Thara Koodatha Samadhanam

உலகம் தரக் கூடாத சமாதானம்
கிறிஸ்து, நமக்கு தருகிறார்
தெய்வீக தயவால், நித்தமும் தேற்றுகிறார் (2)

சமாதானம், சமாதானம் கிறிஸ்துவின் சமாதானம் (2)

கோர சிலுவை சுமந்தார்
நிந்தைகள் சகித்திட்டார்
உன்னை (நம்மை) மீட்கவே,
தம் இரத்தம் சிந்தினார் (2) – சமாதானம்

வாழ்வில் இன்னல்கள் உண்டு
சோதனை தினம் உண்டு
திடன்கொள், உலகை ஜெயித்தார்
நீயும் ஜெயித்திடுவாய் (2) – சமாதானம்

கிறிஸ்துவின் சமாதானம்,
நிரந்தரமானது
நித்திய பாதையில்
என்றென்றும் நடத்திடும் (2) – சமாதானம்

Kristuvin Samadhanam song lyrics in English