இயேசுவே கிருபாசனப்பதியே – YESUVEY KIRUBASANAPATHIE

பல்லவி

இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
இயேசுவே கிருபாசனப்பதியே

சரணங்கள்

1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவு
கண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,
நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்து
நித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே

2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்
பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட
தேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே

3. சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே;
குறை ஏதுனை அண்டினோர்க்கிறைவா எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து முற்று முடியக் கண்பார்த்து – இயேசுவே

4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை
புண்ணியனே உன் சரணம் நண்ணி அண்டினேன்;
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து – இயேசுவே

We will be happy to hear your thoughts

      Leave a reply