Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

Deal Score0
Deal Score0

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

இயேசு பிறந்தார் நம்தேவன் பிறந்தார்
பாவம் பாரா பரிசுத்த கர்த்தர் பிறந்தார்
நம்மை நினைத்தார் தம் ஜீவன் கொடுத்தார் பாவம் எல்லாம் போக்கிவிட யேசு பிறந்தார்

மானிடர் நம்மை நினைக்கவே
மனுமகன் மன்ணில் உதித்தாரே
பாவம் நீக்கி பரலோகம் சேர்த்துக்கொள்ள பாலன் இயேசு வந்து பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார்

தீர்க்கனின் வார்த்தை நிறைவேற
தேவனின் திட்டம் செயல்பட
தேவமைந்தனாய் பூவில் வேந்தனாய்
பாரின் மன்னவன் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார்

    Jeba
        Tamil Christians songs book
        Logo