Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி
Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி
ஏலேலோ ஏலே ஏலே லோ
எந்தன் மாலுமி இயேசு தானே
எந்த கவலையும் எனக்கில்லையே
சீராக நடத்தியே செல்வாரே
சஞ்சலம் ஏதும் எனக்கில்லையே
கடும் புயல் எழும்பி வந்தாலும்
கசப்பான அனுபவம் தந்தாலும்
மாராவின் கசப்பை மாற்றியவர்
மாற்றிடுவாரே கவலைகள் யாவையும்
மாறிடா இயேசுவை
மகிழ்வுடன் போற்றுவோம்
ஏலேலோ ஏலே ஏலே லோ
கடலின் அலைகள் பெரிதாகி
கப்பலை கவிழ்க்க முயன்றாலும்
காற்றையும் கடலையும் அடக்கியவர்
காத்து நல்வழி நடத்திடுவார்
கர்த்தாதி கர்த்தரை
கருத்துடன் போற்றுவோம்