Virunthin Vadivilae Kanintha Iraivanae song lyrics – விருந்தின் வடிவிலே கனிந்த இறைவனே
Virunthin Vadivilae Kanintha Iraivanae song lyrics – விருந்தின் வடிவிலே கனிந்த இறைவனே
விருந்தின் வடிவிலே கனிந்த இறைவனே – நீ
விரும்பும் மனமாய் மாறி உன்னை அருந்த வருகின்றேன்
எந்தன் உள்ளம் நீ வந்தால் எங்கும் என்னில் ஆனந்தம்
எனக்குள்ளே நீ வாழ்வதால் எல்லையில்லா பேரின்பம்
மழைத்தரும் மேகமாய் உன் கருணைப் பொழிகின்றாய்
ஒளிதரும் ஞாயிரைப் போல் என் விழிகளைத் திறக்கின்றாய்
நல்ல ஆயன் நின்குரல் தெள்ளத் தெளிந்த நீர்நிலை
அல்லும் பகலும் உன் வழி பசுமையான புல்வெளி
என்னுள்ளம் ஏங்குதே உனைச் சேரத் துடிக்குதே
வள்ளலே என் இயேசுவே எனில் வாழும் நேசனே
Tamil Thiruvirundhu Paadal விருந்தின் வடிவிலே Tamil Communion Song