Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே

Deal Score0
Deal Score0

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே

விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே
மண்ணகம் மாண்புறவே மாட்சியாகுதே
உள்ளங்கள் எல்லாமே கொள்ளை கொள்ளுதே
உலகம் எங்குமே பொங்கி மகிழுதே

Chorus: வார்த்தை மனுவாக வந்துதித்தார்
வானக தேவனாக வந்துதித்தார்
மாபரன் பிறந்து விட்டார் வாழ்த்துங்கள்
மானுடம் மீட்க வந்தார் வாழ்த்துங்கள்
Happy Christmas Merry Christmas
Happy Merry Christmas

பாலகன் இயேசுவை அள்ளி அணைக்கவே
புதுமையும் நிகழுமே புனிதம் மலருமே
பாலகன் இயேசுவைக் கொஞ்சி முகரவே
குறைகளும் தீருமே கறையும் நீங்குமே
பூவிதழ் விரித்து புன்னகை ததும்பும்
பாலனின் அழகைக் காண வாரீரோ

பாலகன் இயேசுவைப் பார்க்க பார்க்கவே
ஆனந்தம் காணுமே அமைதி தங்குமே
பாலகன் இயேசுவின் குரலைக் கேட்கவே
வசந்தம் வீசுமே வாழ்வும் இனிக்குமே
ஏழ்மையின் கோலமாம் எளிமையின் உருவமாம்
பாலனின் அழகைக் காண வாரீரோ

Jeba
      Tamil Christians songs book
      Logo