Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ
Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ
ஆராரிரோ ஆரிராரோ
ஆராரிரோ ஆரிராரோ –2
வெள்ளி மணியே தாலேலோ
கண்ணின் மணியே ஆராரோ – 2
விண் துறந்த வானவனே மண்ணில் வந்த மன்னவனே! – 2
குளிரும் பனியின் வெட்டவெளி வெண்பனிப்பூவே! – 2
1) உலகம் மீட்படைய அரியணை இறங்கி வந்த
அன்னை மரித் திருமகனே தெள்ளமுதத் தீஞ்சுனையே–2
செல்லமாய் மண்ணிலே பூந்தேகம் தவழ்வதென்ன
செல்வமாய் என்னிலே நீ வாழ வருவதென்ன
சேயாகத் துள்ளி அணைக்கக் கொஞ்சும் உள்ளம் ஏங்குது இங்கே
தாயாக அள்ளி அணைக்க மென்தேகமோ தாவுது இங்கே
2) நல்மனம் கொண்டோருக்கேஅமைதியே ஆகும் என்ற
வானவர் சேதியிலே வாழ்வெல்லாம் மகிழ்கிறதே – 2
உலகே மகிழ நற்செய்தி ஆனவனே!
உனையே தரவே மழலையாய் வந்தவனே!
மாவடு கண்மணியே உள்ளம் எல்லாம் நிறைந்திட வா
மாசறு மரிமகனே ஆனந்தக் குடிலே ஆரிராரோ