Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார்

Deal Score0
Deal Score0

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார்

வருகிறார் இயேசு வருகிறார்
மேகத்தில் கெம்பீரமாக வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்
மகிமை பொருந்தி மாட்சிமையாய் வருகிறார் ( மத்தேயு 24:30 )

சரணம்
ஆரவார சத்தத்தோடு வருகிறார்
எக்காள சத்தத்தோடும் வருகிறார்
ஆரவார சத்தத்தோடு வருகிறார்
தேவ எக்காள சத்தத்தோடும் வருகிறார் ( 1 தெச : 4:16 )
மீட்கப்பட்ட மக்களை சீயோனிலே சேர்க்கவே
இயேசு ராஜன் வேகமாக வருகிறார் ( ஏசாயா: 35:10 )

இரவு பகல் என்பதங்கு இல்லையே
சூரியனின் வெளிச்சம் தேவையில்லையே (வெளி:21:23)
தேவ மகிமையே அதற்க்கு வெளிச்சமே
வெளிச்சத்திலே வாழ்ந்திடுவோமே ( வெளி:21:24)

ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்குவோம் ( வெளி:7:10)
அல்லேலூயா பாடல் பாடி மகிழுவோம் (வெளி:19:4)
மனம்மாறியே மறுரூபமாகியே (ரோமர்:12:2)
மணவாளன் இயேசு ராஜனை காணுவோம். ( மத்தேயு:25:6)

Jeba
      Tamil Christians songs book
      Logo