உன்னோடு நானும் விருந்து – Unnodu naanum virunthu
உன்னோடு நானும் விருந்து – Unnodu naanum virunthu
பல்லவி
உன்னோடு நானும் விருந்து உண்பேன்
உன் இல்லம் நானும் வந்து தங்குவேன்
உன் நெஞ்சில் எனக்கொரு இடம் தருவாயா? என்னை நீயும் அன்பு செய்வாயா? -2
சரணம் 1
என்னகம் உனை நான் ஏற்க என்றும் தகுதி நான் இழந்தேன்
எனினும் எனை நீ தேடி இன்று என்னில்லம் வந்தாயே-2
உன்னையே ஏற்பேன் என்னையே இழப்பேன்
என்னைப் பகிர்ந்திடுவேன் உன்னிலே வாழ்ந்திடுவேன்
வா வா இறைவா வா
வா வா விரைவாய் வா
சரணம் 2
என் மனம் உனைத்தான் அன்பு செய்ய ஆவல் நான் கொண்டேன்
அதை நீ அறிந்து நாடி வந்து
என்னோடு நின்றாயே -2
உன்னையே ஏற்பேன் உண்டு மகிழ்வேன்
உன்னைத் தொடர்ந்திடுவேன் உன்னைப்போல் வாழ்ந்திடுவேன்
வா வா இறைவா வா
வா வா விரைவாய் வா
திருவிருந்து – communion song
Unnodu naanum virunthu song lyrics in English
Unnodu naanum virunthu unbean
un illam naanum Vanthu thanguvean
un nenjil enakkoru idam tharuvaya? ennai neeyum
Anbu seivaaiya? -2
1.Ennagam unai naan yearka entrum thaguthi naan ilanthean
eninum enai nee theadi intru ennilam vanthayae -2
Unnaiyae yearpean ennaiyae ilappepean
ennai pagirnthiduvean unnilae vaalnthiduvean
va va iraiva va
va va viraivaai va
2.En manam unaithaan anbu seiya aaval naan Kondean
athai nee arinthu naadi Vanthu
Ennodu nintrayae-2
unnaiyae yearpean undu magilvean
unnai thodarnthiduvean unnai poal vaalnthiduvean
va va iraiva va
va va viraivaai va