Unmai – சேனைகளின் கர்த்தர் John Jebaraj

Unmai – சேனைகளின் கர்த்தர் John Jebaraj | Ft. Jasper | Levi Ministries | Tamil Christian song

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

1) போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சருக்கல

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ
பல ஆயிரம்
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
வார்த்தைகள் கிடையாது

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

உண்மை உள்ளவரே
சொன்னதை செய்பவரே
தருவேன் என்பதை
முழுவதும் தந்தீரே

தானனா தானனா
தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும்
உண்மை உள்ளவரே
தானனா தானனா
தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும்
எனக்காய் நின்றவரே

We will be happy to hear your thoughts

      Leave a reply