Un Paatham Amarnthu Vittean yesuvae song lyrics – உன் பாதம் அமர்ந்து விட்டேன்
Un Paatham Amarnthu Vittean yesuvae song lyrics – உன் பாதம் அமர்ந்து விட்டேன்
உன் பாதம் அமர்ந்து விட்டேன் – இயேசுவே
ஒரு வார்த்தை பேசுமய்யா
உயிரான உன் வார்த்தைக் கேட்டிடணும் – நான்
ஊருக்கெல்லாம்; ஒளியாக வாழ்ந்திடனும்
உப்பாக எப்போதும் திகழ்ந்திடனும் – நான்
தப்பாது உன் சித்தம் செய்திடனும்
உன் நெஞ்சோட உறவாடி மகிழ்ந்திடனும் – நான்
பிஞ்சுமனதுடனே வாழ்ந்திடனும்
நதியோர மரமாக வளர்ந்திடனும் – நான்
கனிதந்து சீடராய் மாறிடனும்
ஆசைகள் அiதை;தும் துறந்திடனும் – நான்
புதிதாய் உன்னுள்ளே பிறந்திடனும்
வைகறையில் உன்னோடு பேசிடனும் – என்னை
வருத்தும் துயர் எல்லாம் மறந்திடனும்