Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர்

Deal Score0
Deal Score0

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர்

என் மனமே என்மனமே என்மனமே
ஏன் அழுகிறாய் ஏன் திகைக்கிறாய் என் மனமே
உன் விழிகளை மூடிடு
அதில் விடை உண்டு தேடிடு
உன்னை படைத்தவர்
உயிர் கொடுத்தவர்
உன் அருகிலே தினம் நிற்பவர்
இரவெல்லாம் உன்னை சுமப்பவர் உண்டே
மனமே மனமே..

அவரை விட பட்டாயோ அவமானப்பட்டாரே
அவரை விட உடைந்தாயோ
துரோகத்தால் சிதைந்தாரே
உன்னை உருவாக்கிட உருமாறினார்
தனி ஒருவனாய் தலை தொங்கினார்
மறக்காதே நீ மருளாதே நீ
சிதையாதே நீ சீறாதே நீ
சிறப்பாக்குவார்… உன்னை… சிங்கார வனமாக்குவார்

உடைந்து கீழே விழுந்தாயோ
மண்ணாகிப் போனாயோ
மனிதர் உன் மேல் நடந்ததினால்
தரிசாகிப்போனாயோ
கையில் எடுப்பார் வடிவம் கொடுப்பார்
உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார்
கலங்காதே நீ திகையாதே நீ
கரையாதே நீ சிதறாதே நீ
சிறப்பாக்குவார்… உன்னை… சிங்கார வனமாக்குவார்

Jeba
      Tamil Christians songs book
      Logo