Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின்

Deal Score0
Deal Score0

Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின்

உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கம் ஐயா – 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்

துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் – 2

  1. கர்த்தரே நீர் பெரியவர்
    வானங்களிலும் நீர் உயர்ந்தவர் – 2
    உலகம் தோன்றும் முன் இருந்தவர்
    சகலதையும் உருவாக்கினவர் – 2
    நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் – 2
  2. வானங்கள் உம் சிங்காசனம் – இந்த
    பூமியும் உந்தன் பாதப்படி – 2
    சர்வ லோகமும் பணிந்திடும்
    சகல சிருஷ்டியின் நாயகனே – 2
    நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் – 2
Jeba
      Tamil Christians songs book
      Logo