Ullaththil Thontrum Ninaivukalil song lyrics – உள்ளத்தில் தோன்றும் நினைவுகளில்
Ullaththil Thontrum Ninaivukalil song lyrics – உள்ளத்தில் தோன்றும் நினைவுகளில்
உள்ளத்தில் தோன்றும் நினைவுகளில்
அன்பென்னும் கவிதையை இயற்றிடுவேன்
உயிருக்குள் தோன்றும் அசைவுகளில்
உறவின் ராகங்கள் இசைத்திடுவேன்
உலகம் வாழ்வது உறவுகளால்
மண்ணோர் மொழிகள் தெரிந்தாலும்
விண்ணோர் மொழிகள் அறிந்தாலும்
மனசுக்குள் அன்பு வழிந்திடனும்
மண்ணிக்கும் பண்பில் வளர்ந்திடனும்
ஓடும் நதிகள் காய்ந்தாலும்
ஆடும் மலைகள் ஓய்ந்தாலும்
அன்புப் பயணங்கள் முடிவதில்லை
ஆனந்த ராகங்கள் அழிவதில்லை