Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர்
Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர்
தீமையை நன்மையாக மாற்றுபவர்
தீங்கு நாளில் என்னை மறைத்து வைத்து உயர்த்துபவர்
தீமைகள் நன்மையாக மாறும் போது தீங்கு கூட நல்லதென்று புரிந்து கொண்டேன்
உம் கரத்தின் வல்லமைகள் பார்க்கும்போது பாரம் கூட மேன்மை என்று அறிந்து கொண்டேன்
நீங்க என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான் தீமை போல் தெரிந்தாலும் அது என் நன்மைக்குதான்
இயேசு என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான் தீமை போல் தெரிந்தாலும் அது என் நன்மைக்கு தான்
இதுவரையில் எல்லாம் செய்தது நீரல்லோ
இனிமேல் மாத்திரம் எங்களை கைவிடுவீரோ
இதுவரையில் எல்லாம் செய்தது நீரல்லோ
இனிமேல் மாத்திரம் எங்களை விட்டுவிடுவீரோ
அற்பமாய் பார்த்த எல்லா கண்களும் அண்ணாந்து பார்க்கும் படி உயர்த்தி வைத்தவர்
குழியிலே தூக்கிப்போட்ட எல்லா மனிதரும் குனிந்து நின்று வணங்கும்படி உதவி செய்தவர்
தகுதி இல்லா எனக்கும் தரமானது நடக்கும்
தகப்பன் நீர் இருக்க என் தலையும் உயரும்
2.இராமுழுதும்
எழுப்பப்பட்ட
தூக்கு மரத்தினை
நொடிப்பொழுதில்
மாற்றி போட்டு
உதவி செய்தவர்
வாசலில்
வணங்கி நின்ற
வாழ்க்கைதனை
தேசங்கள் வணங்கும்படி உயர்த்தி வைத்தவர்
வாக்குத்தத்தம் என்னில் வேராக நிலைத்திருக்க என் வாழ்க்கை என்றும் பனைமரமாய் உயரும்
Kaividuveero Carmel prayer ministries song lyrics