Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே
Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே
தாய்க்கு ஈடில்லையே மரியன்னைக்கு நிகரில்லையே
அவள் இறைவன் வடித்த புதுமைப்பெண்
மாந்தர் நமக்கு இறைவரம்
கடல் கடக்கும் மாந்தரின் கலங்கரை விளக்கம் – தாய்க்கு…
புது ஏவாளாக அருள் நிறைந்தவளாக
இறைத்தந்தை மனம் உவந்தாள்
அமலோற்பவியாக அர்ப்பணமலராக
திரு மகன் உளம் உவந்தார்
மண்ணக வாழ்வின் இயேசுவின் பயணம்
மரியன்னை பயணம் அன்றோ
மாண்புயர் வழியுமன்றோ – தாய்க்கு…
இறையரசரங்கேறும் மீட்பின் நல்நேரம்
மரியன்னை துணை நின்றார்
இன்பங்கள் துன்பங்கள் இறை வெளிப்பாடுகள்
அனைத்திலும் அவள் இணைந்தாள்
அவள் வழி நம் வழி ஆவியின் துணை வழி
இனி அச்சம் நமக்கு இல்லையே
நடத்துவார் அவர் நம்மையே – தாய்க்கு