Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக

Deal Score0
Deal Score0

Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக

தாயில்லாத எனக்குத் தாயாக வந்தவரே
தந்தை இல்லாத எனக்குத் தந்தையாக சுமந்தவரே.2

இயேசு தான் அவர் என் இயேசு தான்.2

பெற்றெடுத்த தாய் என்ன குப்பைத் தொட்டியில போட்டுடாங்க
தூக்கி வளர்க்கும் தந்தை கூட ராசி இல்லன்னு விட்டுட்டாங்க.2
இயேசு என்னை குப்பைதொட்டியில் விடல
இயேசப்பாவின் உள்ளங்கையில் இருக்கேன்.2

ஊனமா பிறந்தது நான் செய்த தவறா
ஊரெல்லாம் பேசும் வார்த்தை
வேதனைதான் ஐயா.2
உருவாக்கும் தேவன் அவர் இயேசு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊனம் மாறும். 2

தாயில்லாப் பிள்ளை இது
தருதலைன்னு சொல்றாங்க
தந்தையில்லா பிள்ளை என்று
ஊரெல்லாம் வேறுத்தாங்க இயேசு என்னை நேசிக்கிறார் தெரியுமா
இயேசு என்னை வெறுக்க மாட்டார் தெரிஞ்சுக்கோ.2

தாயும் தகப்பனும் பரத்துக்கு போயிட்டாங்க
தாங்கவோ சுமக்கவோ ஒவ்வொருவரும் இல்லப்பா
ஆதரிக்க என் இயேசு வந்தாரு
அன்று முதல் இன்று வரை காத்தாறு.2

Jeba
      Tamil Christians songs book
      Logo