Thaangidum Karam Neeyae Naan Song lyrics – தாங்கிடும் கரம் நீயே
Thaangidum Karam Neeyae Naan Song lyrics – தாங்கிடும் கரம் நீயே
தாங்கிடும் கரம் நீயே – நான்
தளர்ந்திடும் நேரத்திலே
தாயாய் அருகில் இருப்பதும் நீயே
தந்தையாய் காத்து வளர்ப்பதும் நீயே
செல்கின்ற வழி எங்கும்
நல்லாயானாய் காண்பேன்
செய்கின்ற செயல்களிலே
உன் ஆற்றல் உணர்ந்திடுவேன்
தனித்திடும் வேளையில் உன்
துணைப் பெறுவேன்
தனியாத தாகத்தில்
நீறுற்றாய்ச் சுவைப்பேன்
உன் அன்பே போதும்
உன் அருளே போதும்
உன் ஒளியே போதும்
வேறென்ன வேண்டும்
இருள் சூழும் பாதையில்
பேரொளியாய்க் காண்பேன்
இன்னல்கள் நெருங்குகையில்
உன் கரத்தை உணர்ந்திடுவேன்
மாறிடும் திசைகளில்
வழித்துணைப் பெறுவேன்
மாறாத உன் அன்பின்
இனிமையைச் சுவைப்பேன்
உன் அன்பே போதும்
உன் அருளே போதும்
உன் ஒளியே போதும்
வேறென்ன வேண்டும்