Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ

Deal Score0
Deal Score0

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ

சுடும் வெயிலோ
அனல்காற்றோ
கடுங்குளிரோ
மணல் புயலோ.

கலங்காதிரு கலங்காதிரு
கர்த்தர் உன்னோடு உண்டு
கலங்காதிரு கலங்காதிரு
கர்த்தர் உன்னோடு உண்டு

. நிந்தைகள் உன்னில் பெருகிடும் போது
தேவனின் வார்த்தை உன்னை தேற்றுமே
மரண பள்ளதாக்கை கடந்திடும் போது
கர்த்தரின் வலது கரம் காக்குமே
உன் மீது நினைவாக உள்ளார்
கண்மணி போல் உன்னை காப்பார்
உன் மீது நோக்கமாய் உள்ளார்
பாதம் இடறாது காப்பார்
கலங்காதிரு கலங்காதிரு
கர்த்தர் உன்னோடு உண்டு

வேதனையாலே நீ அழும்போது
வேதத்தின் வசனத்தாலே தேற்றுவார்
பாதைகள் இன்றி தவித்திடும் போது
மேய்ப்பனாய் உன்னை வழிநடத்துவார்
உன் மீது கருத்தாக உள்ளார்
பாதம் இடறாது காப்பார்
தகப்பனை போல உன்னை தூக்கி
தாயை போல அரவணைப்பார்
கலங்காதிரு கலங்காதிரு
கர்த்தர் உன்னோடு உண்டு

Jeba
      Tamil Christians songs book
      Logo