பல்லவி
யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்.
அனுபல்லவி
நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு
சரணங்கள்
1. நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?
பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு
2. யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;
நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு
3. என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;
என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன். – யேசு
4. நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்கத், தேவா, எனை நடத்தும். – யேசு
5. சீர்ப்படத் தாமதமேன்? ஜீவவழி பிடிப்பேன்;
ஈறந்தத்தை நினைப்பேன், என் தீபமே சோடிப்பேன். – யேசு
6. யேசுவின் நீதியால்நான் என்பாவத்தை மூடுவேன்;
மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து. – யேசு
7. ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்;
மாண்டோர் அவர், நான் மாளேன், மரணம் எனதுபாக்யம் – யேசு
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/622560137946201
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
When I heard, my belly trembled; my lips quivered at the voice: rottenness entered into my bones, and I trembled in myself, that I might rest in the day of trouble: when he cometh up unto the people, he will invade them with his troops.
ஆபகூக் : Habakkuk:3:16