Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப்
சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப்

சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப்

எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்-ஏசுவைப்

அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

They profess that they know God; but in works they deny him, being abominable, and disobedient, and unto every good work reprobate.

தீத்து : Titus:1:16

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version