ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை
2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை
3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும்
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை
4. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய்
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை
5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே – ஏழை