Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே

விசுவாசமே வேத பிரமாணமே – Visuvaasamae Vedha Piramaanamae

பல்லவி

விசுவாசமே, வேத பிரமாணமே – நம்
இரட்சண்ய சேனையின் விசுவாசமே – இது
பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்
அடங்கிய சத்திய வேதாகமமே

சரணங்கள்

  1. தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்
    கிறிஸ்தவ விசுவாச கிரியையுமான
    தெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்
    மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் – விசு
  2. எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்
    பாதுகாவலரும், ஆள்பவருமான
    வணக்கத்திற்குரிய பூரண தேவன்
    ஒருவரே என விசுவாசிக்கின்றோம் – விசு
  3. தத்துவம் தன்னில் பிரியாதவரும்
    வல்லமை மகிமை சமமான
    பிதா, குமாரன் பரிசுத்த ஆவி
    திரித்துவரென விசுவாசிக்கின்றோம் -விசு
  4. கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக தெய்வீக
    தன்மைகள் அடங்கி இருப்பதனால்
    மெய்யாக தேவனாய், மெய்யாக மனிதனாய்
    இருக்கிறார் என விசுவாசிக்கின்றோம் -விசு
  5. ஆதிப்பெற்றோர்கள் நிர்மலராக
    சிருஷ்டிக்கப்பட்டு கீழ்ப்படியாது
    பரிசுத்தம் இழந்து பரமனின் கோப
    ஆக்கினையடைந்தார் விசுவாசிக்கின்றோம் – விசு
  6. விருப்பமுள்ளோ ரெவராயினும் அவர்கள்
    இரட்சிப்படைய கர்த்தர் கிறிஸ்தேசு
    பாடு மரணத்தால் – பாரிதை மீட்க
    பலியானார் என விசுவாசிக்கின்றோம் – விசு
  7. தேவனுக்கு முன் மனஸ்தாபமுடன்
    இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும்
    பரிசுத்த ஆவியால் வரும் மறுபிறப்பும்
    இரட்சைக்குத் தேவை விசுவாசிக்கின்றோம் – விசு
  8. கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால்
    கிருபையால் நீதிமான் ஆகின்றோம்
    அவரில் விசுவாசித்தால் தன்னிலே அந்த
    சாட்சி உண்டென்று விசுவாசிக்கின்றோம் – விசு
  9. இரட்சிப்பில் நிலைத்தல் கிறிஸ்துவிலுள்ள
    இடைவிடா விசுவாசம் கீழ்ப்படிதல்
    இவைகளில் சார்ந்து இருக்கிறதென்று
    இதயமதில் விசுவாசிக்கின்றோம் – விசு
  10. பூரண சுத்தி, விஸ்வாசியின் சிலாக்கியம்
    கர்த்தராம் கிறிஸ்து வருமளவும்
    ஆவி, ஆத்மா, சரீரம் அழுக்கற
    காக்கப்படும் விசுவாசிக்கின்றோம் – விசு
  11. அழியாது ஆத்மா உயிர்த்தெழும் சரீரம்
    அகிலம் முடிவில் நியாய விதி உண்டு
    நீதிமானின் ஆனந்தம் துன்மார்க்கரின் ஆக்கினை
    நித்தியம் என விசுவாசிக்கின்றோம் – விசு

Visuvaasamae Vedha Piramaanamae – Nam
Ratchanya Seanaiyin Visuvaasamae – Ithu
Palaya Yearpaadum Puthiya Yearpaadum
Adangiya Saththiya Veadhamamae

1.Deva Yeavuthalaal Arulapattathentrum
Kiristhava Visuvaasa Kiriyaiyumaana
Deiveega sattam Adanginathentrum
Meiyaagavae Visuvaasikintrom

2.Ellavattrikkum Shirustikaraayum
Paathukaavalarum Aalpavarumaana
Vanakkaththirkuriya Poorana Devan
Oruvarae Ena Visuvaasikintrom

3.Thaththuvam Thannil Piriyaathavarum
Vallamai Magimai Samamaana
Pitha Kumaaran Parisuththa Aavi
Thiriththuvarena Visuvaasikintrom

4.Karththaraam Kiristhuvin Manusheega Deiveega
Thanmaigal Adangi Iruppathanaal
Meiyaaga Devanaai Meiyaaga Manithanaai
Irukkiraar Ena Visuvaasikintrom

5.Aathi pettroorgal Nirmalaraaga
Shirustikkapattu Keezhpadiyathu
Parisuththam Elanthu Pramanin Koba
Akkinaiyadainthaar Visuvaasikintrom

6.Virupamulloor Evaraayinum Avargal
Ratchippadaya Karththar Kiristhesu
Paadu Maranaththaal Paarithai Meetkka
Paliyaanaar Ena Visuvaasikintrom

7.Devanukku Mun Manasthaapamudan
Yeasu Kiristhuvil Visuvaasamum
Parisuththa Aaviyaal Varum Marupirappum
Ratchaiku Theavai Visuvaasikintrom

8.Kiristhuvil Ulla Visuvaasaththaal
Kirubaiyaal Neethimaan Aakintrom
Avaril Visuvaasiththaal Thannilae Antha
Saatchi Undentru Visuvaasikintrom

9.Ratchippil Nilaiththal Kiristhuvilulla
Idaividaa Visuwaasam Keezhpadithal
Evaikalil Saarnthu Irukkirathentru
Idhayamathil Visuvaasikintrom

10.Poorana Suththi Visuvaasiyin Silakkiyam
Karththaraam Kiristhu Varumalavum
Aavi Aathmaa Sareeram Alukkkara
Kaakkappadum Visuvaasikintrom

11.Aliyaathu Aathmaa Uyirthealum Sareeram
Agilam Mudivil Niyaaya Vithi undu
Neethimaanain Aanantham Thunmaarkkarin Akkinai
Niththiyam Ena Visuvaasikintrom

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version