Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

வழியில இணைஞ்சவரே
என் விழிகள திறந்தவரே
எம்மாவு போகும் வழியில
நீர் என்னோட வந்து இணைகையில
புதிதானேன், தெளிவானேன்
முழுசா அறிந்தேனே (2)

ஏதேதோ நடந்தது
எல்லாமே முடிஞ்சது
இனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)
வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவே
என் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவே
உண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்
இயேசுவே..

விலகி நீர் போகவும்
உம்ம வருந்தி வரக்கேட்கவும்
அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)
நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்
இதை அறியாத பலருண்டு என எண்ணித் துடிச்சிட்டேன்
விரைவாக, நிறைவாக
நானும் சென்றேனே

Tamil Christian Songs | Vazhiyila | Christian Songs Tamil | Paul H Rufus | CROSSINGS

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version