Ummalae yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா

உம்மாலேயன்றி இரட்சகா – Ummalaeyentri Ratchaka

1. உம்மாலேயன்றி இரட்சகா!
பேர் நன்மை காண்கிலேன்;
மெய்ச் சமாதானம் இன்பமும்
வேறெங்கும் பெற்றிலேன்

பல்லவி

வெறொன்றினாலும் இரட்சகா!
மெய்ப் பாக்யம் அடையேன்
உம்மாலே தான் என் ஆண்டவா!
சந்தோஷமாகிறேன்

2. பேரன்பை உணராமலே
மெய்ப் பாக்யம் நாடினேன்
நான் ஆவலோடு தேடியும்
ஏமாறிப் போயினேன் – வேறொன்றி

3. பூலோகப் பொருள் இன்பத்தை
பின்பற்றி நம்பினேன்
சற்றேனும் அற்ப வாழ்வினால்
நான் திருப்தியாகிலேன் – வேறொன்றி

4. இப்போதே உந்தன் இரட்சிப்பை
கண்டிளைப்பாறினேன்;
ஆனந்தம் பொங்கி இன்பமாய்
நான் போற்றிப் பாடுவேன் – வேறொன்றி

1.Ummalaeyentri Ratchaka
Pear Nanmai Kaankilean
Mei Samaathaanam Inbamum
Vearngum Pettrilean

Ovvontrinaalum Ratchaka
Mei Baakyam Adaiyean
Ummalae Thaan En Aandava
Santhoshamaakirean

2.Pearanbai Unaraamalae
Mei Bakkyam Naadinean
Naan Aavadlodu Theadiyum
Yemaari Poyinean

3.Boologa porul Inbaththai
Pinpattri Nambinean
Satteanum Arpa Vaazhvinaal
Naan Thirupthiyaakilean

4.Ippothae Untha Ratchippai
Kadilaipaarinean
Aanantham Pongi Inbamaai
Naan Pottri Paaduvean

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version