தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal

தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா

உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்

1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்

2. விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா

3. என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்

4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்

5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்

6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே

https://www.youtube.com/watch?v=GbfabvmTLhA

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version