tamil christian keerthanaikal

tamil christian keerthanaikal songs lyrics

Tamil christian songs lyrics ,

Christian songs lyrics ,

christian songs tamil lyrics ,

Latest tamil christian songs

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ […]

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil

இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil பல்லவி யேசு நாமமல்லாம்-உலகினில்வேறு நாமம் இல்லை,-கிறிஸ்து அனுபல்லவி தேசுலாவிய கேரூபீம்பணிதிவ்ய வானவர் முனிவர் கண்மணி,மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,மதிக்கும் சத்திய வேத சிரோமணி – யேசு சரணங்கள் 1. வானமும் புவியும்-கதி-ரோன் மதி உடுவும்கானல் வரை கடலும்-நர-ரான எவ்வுயிரும்தானே படைத்தருள் ஆதி காரணன்,சர்வ ஜீவ தயாபரா பூரணன்,ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்,இலங்கும் வேத சங்கீத பாராயணன். – யேசு 2. காவிலாத மேவை-செய்-தீவினையதனால்பூவின் மாந்தர் படும்-துயர்-தேவ கோபமற,பாவிகளைப் பரனோடுற

இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil Read More »

ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum

பல்லவி ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்இன்பந்தனைப் பாரும் . அனுபல்லவி வான்பல கணிகளைத் திறந்தாசீர்வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்நான் தருவேன் ,பரிசோதியுங்களென்றுராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்டவர் சரணங்கள் 1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்விண்ணவர் கோமானே -அந்தமேதகத்தை நன்றி ஞாபகம் செய்திடவிதித்தது தானே .வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்டவர் 2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்யஅருட்பணி பேண,

ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum Read More »

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae

ஞான திரி ‘முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள் ஞான திரி முதலொரு பொருளே. அனுபல்லவி வானவர் துதி செய் அனாதி குருபரனே, ரீ ரீ ரீ ரீ மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே. சரணங்கள் 1 மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே மண்ணில் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூப வஸ்தே, 2 நித்தம் விக்கினம் வராமல் ரட்சித்த நன்னேசா

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae Read More »

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei

பல்லவி தேவசுதனைத் துதிசெய், என துள்ளமே தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று அனுபல்லவி ஜீவ தயாபர ரான யெகோவாவின் திருச் சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர் பாவ விமோசனராகச் சிலுவையில் பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர் சரணங்கள் 1 வானும், புவியும், திரையும்-அவைகளின் உள் வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச் சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி போன வருடம் முழுதும் நடத்திக் காத்து புது வருடமார் இதில்

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei Read More »

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane

பல்லவி மகிழையனே மன மகிழையனே துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே அனுபல்லவி வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி மனோகர தினமேவி சரணங்கள் 1.சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா 2. ‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா 3. நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா நல்ல சகாயா தனை பாராயோ

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane Read More »

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம் அன்பின் ஈவாய் அருள்வீர் அனுபல்லவி துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில் நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும் சரணங்கள் 1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர் நல்கும் தயை உறவே புன்மை மிகு பவத் தன்மைய ராயினும் போந்த நலமெமக் கீந்த தயாளராம் 2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும் அன்போ டெந்நாளும் ஐயா தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம் தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer Read More »

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

வருவாய்! கருணா நிதியே!- புது வருடமதில் துதி 1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல் வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட 2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும் வேண்டிய வாறே விளங்கி வளர் ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா 3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே ஆதிபன் ஆவியின் அபிஷேகம் ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும் வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Read More »

சோபனமாக சுப தினமே- Shobanamaaga suba dhiname

பல்லவி சோபனமாக சுப தினமே மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர் சுப ஜெய மங்களமே (3) – ஆமென் அனுபல்லவி சீர்பெற திருமணம் என்றும் வாழ்க அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே சரணங்கள் 1. ஆனந்தமாக வாழ்ந்திடவே ஆண்டவனருளால் அனுதினமே அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற 2. மாநில மீதில் மனமுவந்தே மங்கள வாழ்வு தனிற் சிறந்தே பாலெனப் பொங்கிப் பல வளனும் பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற 3. சந்ததி

சோபனமாக சுப தினமே- Shobanamaaga suba dhiname Read More »

தினம் தினம் இயேசு நாயகனை- Dhinam Dhinam Yesu Naayaganai

தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்! ஆனந்தமாக என் நேசர் மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம் 1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக 2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக 3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக 4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க

தினம் தினம் இயேசு நாயகனை- Dhinam Dhinam Yesu Naayaganai Read More »

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli

1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli Read More »

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks