வா

Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ

வாரீரோ வினை திரீரோ பல்லவி வாரீரோ? வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு அனுபல்லவி வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ; பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ சரணங்கள் 1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே, சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே கானகமே மேவும் மானது போலானேன்; வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ 2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம் இட்டப் […]

Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ Read More »

Vaa Paavi Malaithu – வா பாவி மலைத்து

வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா சரணங்கள் என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே ; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே , உள்ளபடி வாவேன் – வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் , உன் பாவத்தைச் சுமந்தேன் ; சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் , ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

Vaa Paavi Malaithu – வா பாவி மலைத்து Read More »

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என்

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ

பல்லவி வானராச்சியம் வந்ததோ கோகோ! மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ! அனுபல்லவி ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார்.- வான சரணங்கள் 1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார் வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே என்னிலும் பெரியார் வலியார் அவர் இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான 2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர் பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர் சுந்தரப் பரிபூரணர் காரணர் ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.-

Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ Read More »

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum

1. வாழ்நாளில் யாது நேரிட்டும், எவ்வின்ப துன்பத்தில் நான் போற்றுவேன் என் ஸ்வாமியை சிந்தித்து ஆன்மாவில். 2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம் அவர் மா நாமமே என் தீங்கில் கேட்டார் வேண்டலே தந்தார் சகாயமே. 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே விண் சேனை காத்திடும் கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும் சகாயம் கிட்டிடும். 4. அவர் மா அன்பை ருசிப்பின் பக்தர் நீர் காண்பீராம் பக்தரே பக்தர் மட்டுமே மெய்ப் பேறு பெற்றோராம். 5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்

1. வானம் பூமி யாவற்றிலும்யேசு மேலானவர்மனிதர், தூதர், பேய்தானும்அவர் முன் வீழுவர். நான் நம்புவேன், நான் நம்புவேன்யேசு எனக்காய் மரித்தார்,பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார். 2. இரட்சகர் உயிர் விட்டதும்எந்தனுக்காகவே;வெறெந்த மாமன் றாட்டுக்கும்ஆங்கிட மில்லையே. 3. பாவத்தின் மாளும் யாவர்க்கும்உயிரளிக்குமே;பெலனற்ற ஆத்மாவுக்கும்சக்தி கொடுக்குமே. 4. லோகம் இவ்வன்பின் மாட்சிமைருசித்துப் பார்க்காதோ?மீட்ப ருதிர வல்லமைவந்து சோதியாதோ? 5. என் மரணப் படுக்கையில்யேசென்ற நாமத்தை,பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்அடைவேன் நித்திரை.     வானம் பூமி யாவற்றிலும் – Vaanam Boomi Yaavatrilum

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும் Read More »

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

வாழ்வை நம்பாதே – Vaazhvai Nambathae பல்லவி வாழ்வை நம்பாதே – மனமேவாழ்வை நம்பாதே அனுபல்லவி தாழ்வில்லாத நமது சுவாமிதாழைத் தேடிப் பாவம் விடு சரணங்கள் 1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர்எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்குசெத்தவரில் எவர் மீண்டார்தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ் 2. இன்று பல்லக்கினில் போவார் – நாளைஎடுக்கும் ஆட்களும் ஆவார் நரர்என்றவர் யாவரும் சாவார் – மதியீனர் நரகத்தில் சேர்வார் – புவி –

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே Read More »

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa பல்லவி வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி! சரணங்கள் 1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்நிலைத்திருக்காதே; இப்போதாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;தாமதஞ் செய்யாதே – வா 2. பாவநாசர் உனக்கென்று சிந்தினஇரத்தம் அதோ பாராய்! – மனஸ்தாபத்தோடேசுவின் பாதத்தில் சேரஇக்ஷணமே வாராய் – வா 3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்தீவிரமா யோடிவா – உன்பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Read More »

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே 1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே.

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே Read More »

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா 1. வானதூதர் சேனை போற்றும் யேகோவாமங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்ஞான மணவாளன் இயேசு நாதனைநாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம்நம் இராஜன் நேசர் இயேசுவைவாழ்த்திப் பாடுவோம்இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கிஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவா பக்தி

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா Read More »

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? —

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version