பல்லவி
பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்
வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!
சரணங்கள்
1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே. – பரம
2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம
3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம
4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. – பரம
5. ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா! – பரம