Paavi Intrae Thirumbayo – பாவி இன்றே திரும்பயோ

பல்லவி

பாவி இன்றே திரும்பயோ?- நேச
வியின் சத்தம் கேளாயோ?

அனுபல்லவி

மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி.- பாவி

சரணங்கள்

1.பாவம் தொடர்ந்து செல்லுமே- பாவ
சாபம் அடர்ந்து கொல்லுமே – உனின்ப
லாபம் எல்லாமே சபாம் காலமிதுவே காலம்
தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு- பாவி

2.எத்தனை போதனை பெற்றாய் – ஜயையோ!
சுத்தமாய்ச் சாதனை அற்றாய்- என்றாலும்
அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து
அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று.- பாவி

3.கல்வாரியில் தொங்கினோர் யார்? – உனக்
கல்லோ நேசர் ஏங்கினோர் பார்!- இன்னும்
பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச்
சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான.- பாவி

4.நிலை யின்றலை கின்றோரே – ரத்த
விலை மதியாமல் சென்றோரே – போதும்
மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி
உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரஷைபெற.- பாவி

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version