Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

1 கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கர்த்தராம் இம்மானுவேலே,
ஓசன்னா.

2 அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3 வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4 சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5 விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6 தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்;
உன்னதம் முழக்குமெங்கள்
ஓசன்னா.

7 அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
ஆதியந்த மில்லாதோர்க்கு
ஓசன்னா.

8 தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version