இந்த காலம் பொல்லாதது – Intha Kaalam Pollathathu Lyrics

இந்த காலம் பொல்லாதது – உன்னை
கர்த்தர் அழைக்கிறார் (2)
நீ வாழும் வாழ்க்கைதான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்று காத்து வருகிறார் – இந்த காலம்

2. வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவா
சாத்தான் களத்தில் போரிட
செயல் வீரராய் திகழவா – இந்த காலம்

3. பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே – இந்த காலம்

4. காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் – இந்த காலம்

5. அல்லேலூயா பாடியே பரலோகமே சேருவாய்
பரன் இயேசுவின் பாதத்தில்
நல்ல பங்கினை பெற்றிடுவாய் – இந்த காலம்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version