Ezhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே

எளியனுக்கிரங்குவாயே

பல்லவி

இறைவன் நீயே – எளியனுக்
கிரங்குவாயே.

அனுபல்லவி

மறை விளக்கி இந்நரரை மீட்க இம்
மானுவேல் எனும் நாமம் மேவியே
தரையில் வந்தவ தரித்த ஏழைகள்
தாதா ஏசுநாதா என்.- இறை

1.ஆண்டவர்கள் போற்றும் விண்ணோனே – எங்கள்
ஆதரவாய் உற்ற கோனே நல்ல
தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத்
தூயா அன்பர் நேயா என் -இறை

2. நன்று திகழ் பெரியோனே – திவ்ய
ஞானம் எனும் பெயரோனே இயல்
அன்றும் இன்றும் ஒன்றுபோல உறும்
ஐயா ஒளிர் மெய்யா என்-இறை

3.எங்கும் நிறைந்த வல்லோனே – அன்பர்க்
கின்பு செய்கின்ற நல்லோனே மிக
இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள்
ஈவாய் க்ருபை ஆவாய் என்-இறை

என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

Even as it is meet for me to think this of you all, because I have you in my heart; inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace.

பிலிப்பியர் : Philippians:1:7

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version