எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam
எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே
அனுபல்லவி
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை
சரணங்கள்
1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை
3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை
4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை
Eththanai Thiral En Paavam, En Devanae!
Eliyavan Mael Erangaiyanae
Niththam En Irudhayam Theeyathen paranae
Nilaivaram Enil Illai; Nee En Thaabaramae
1.Paththam Un Meal Enakkillai Enbaeno
Paninthidal Ozhivaeno
Suththamurun karam kaalkal, Vilavinil
Thontruthu Kaayangal, Thooya Shineka
2.Entran Aneethigal En Kankal Munnamae
Idaividathirukaiyilae
Untran Migun kirubai Oh Migavum Periyatahe
Uththama manamudaiyoi Enai Aalum
3.Aayan kolvonpol paava sththripol
Arukiliruntha Kallan poal
Neayamaai Un Saran En Vanaginean
Nee Enakagavae Mariththanai Paranae
4.Ketta Maganpoal thuttanaai Alainthean
Kedu Pankathaal Nalinthean
Ittamaai Magan Ena paathiran Alan Naan
Ennai Ratchithidal Untran Nimithamae Appanae