பல்லவி
அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம்,
வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும்.
அனுபல்லவி
சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர்
தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. – அல்லே
சரணங்கள்
1. வானம் புவியும்படைத்த பிதாவுக்கும்
மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும்
ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும்
நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் – அல்லே
2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை
மேதினியெங்கும் அனுப்பித்திருமறை
தீதறப்போதகஞ் செய்யவழி செய்த
சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. – அல்லே
3. வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை
வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட,
ஏதுங்குறைவறவே செய்த தேவனை
ஏற்றித்துதிசெய்வம், போற்றிப் புகழ்செய்வம் – அல்லே
4. ஆகாதபேயின் அகோரத்தினாற் சபை
யானதுள்வந்து புகுந்த பிழைகளை
வாகாக நீக்கவழி செய்த கர்த்தனை
வந்தனை செய்வோம் நாம் சிந்தனையாகவே – அல்லே
5. வானாதி சேனைமகிழ்ந் திசைகள்பாட
மக்கட்குழாமும் களிப்புடனேசேர
ஈனப்பிசாசின் இடர்களெல்லாந்தீர,
ஏகன்தயைசெய்தார், வாகாய் அருள்பெய்தார். – அல்லே
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl that may fly above the earth in the open firmament of heaven.
ஆதியாகமம் | Genesis: 1: 20
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam