Aaviyai Arulumean Swamy – ஆவியை அருளுமேன் சுவாமி

ஆவியை அருளுமேன் சுவாமி – Aaviyai Arulumean Swami


பல்லவி

ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய்
உயிர் கொடுத்த வானத்தின் அரசே!

சரணங்கள்

1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,
ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,
பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,
பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி – ஆவியை

2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி
பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,
ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,
ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி – ஆவியை

3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,
பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,
கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,
கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி – ஆவியை

4. பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,
பரமனே! அடியேனும் தானாகக் காண
தேவ வரமதனை அளித்திடும் ஐயா!
தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற – ஆவியை

5. உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!
உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;
மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா
மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா! – ஆவியை

Aaviyai Arulumean Swami – Enakkaai
Uyir Koduththa Vaanaththin Arasae

1.Ulagaththai Vittu Ratchikkum Aavi
Oomaiyar Vaaikalai Thiranthidum Aavi
Parisuththavaankalil Vasiththidum Aavi
Paavikalai Sirai Meettidum Aavi

2.Paaviyai Ninaithu Neer Urugina Aavi
Paraththai vittu Puviyil Vara seitha Aavi
Aavalaai Adiyaenai Theadina Aavi
Aanantha Kalippai Azhiththitta Aavi

3.Penthekosthennum Naalil Polinthitta Aavi
Baktharkku Puthu Belan Aliththitta Aavi
Kalvaari Paathaiyil Nadaththidum Aavi
Karththarae Um Siththam Seithidum Aavi

4.Paavaththai Devareer Kaanpathai Pola
Paramanae Adiyeanum Thaanaaka Kaana
Deva Varamathanai Aliththidum Aiyya
Thealivudan Athai Naan Paavikku Koora

5.Ulagaththor Maandu Pogiraar Swami
Unantha Aavi Veandumen Swami
Malarnthengal Mugankalai Nokkumean Aiyya
Mazhai Pol Aaaviyai Varushiyum Aiyya

யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

ஆதியாகமம் | Genesis: 5: 20

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version