Aaradhanai Hallelujah / ஆராதனை அல்லேலூயா – Stanley Prabhuraj

என்னை சிருஷ்டித்த தேவனுக்கு நன்றி சொல்ல நான் மறவேன்
என்னை வனைந்துஎடுத்த குயவனுக்கு புகழ் பாட நான் மறவேன் – (2)
நான் நிற்பது அவர் கிருபையே
அவரை உயர்த்தி பாடிட நான் மறவேன் – (2)

Chorus
ஆராதனை அல்லேலூயா (3)
அவர் நாமத்தை உயர்த்துவேன்
(1)
சேற்றில் இருந்து தூக்கி எடுத்து, கன்மலை மேல் நிறுத்தினார்
பாவ வழியை விட்டு விலகி, நீதியின் பாதையில் நடத்தினார் – அவர்
நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்
ஏசுவை என்றும் போற்றி பாடிட நான் மறவேன் – (2)
——— ஆராதனை அல்லேலூயா
(2)
வெட்கப்பட இடத்தில் உயர்த்தி, தள்ளப்பட்ட இடத்தில் தாங்கினார்
பாவ வழியை விட்டு விலகி, நீதியின் பாதையில் நடத்தினார் – அவர்
அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமும் ஆனவர்
ஏசுவை என்றும் உயர்த்தி பாடிட நான் மறவேன் – (2)
——— ஆராதனை அல்லேலூயா
(3)
கண்ணீரை துடைத்து மகிழ்ச்சி தந்து, சோரவினை மாற்றி பெலத்தை தந்தார்
தூக்கத்தை மாற்றி களிப்பை தந்து, துயரத்தை மாதிரி மகிழ்வை தந்தார் – அவர்
வழியும், சத்தியம் ஜீவனும் ஆனவர்
ஏசுவை என்றும் மேன்மை படுத்திட நான் மறவேன் – (2)
——— ஆராதனை அல்லேலூயா

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version