Aandavarin Namamathai – ஆண்டவரின் நாமமதை

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண்

உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண்

கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண்

வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண்

மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் – ஆண்

பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே – ஆண்

சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே – ஆண்

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

And the LORD God said unto the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.

ஆதியாகமம் | Genesis: 3: 13

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version