Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean

பல்லவி

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்
ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்

அனுபல்லவி

அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்

சரணங்கள்

1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே;
மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு
நாதன் என் பக்கமாய் வந்தனரே;
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – இந்த
பாரதில் எனை வெற்றி சிறக்க செய்தார்

3. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்பரன் சேவை என் தாகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே

4. கானானின் கரை இதோ காண்கின்றதே – எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே;
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் – விரை
வாக நம் ஓட்டத்தை முடித்திடுவோம்

5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தாம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்;
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

Aanantha Paadalgal Padiduvean – Enthan
Aaththuma Neasarai Pugalnthiduvean

Alaisalgal Yaavaiyum Agala seithaar – Nalla
Meisalil Enthanai Magila Seithaar

1.Mealoga Naadenthan Sonthamathae – Intha
Boologa Naattamum Kuraikintrathae
Maayaiyil Manam Ini Vaithtidaamal – Neasar
Kaayamathai Enni Vaazhnthiduvean

2.Nambikkai Attronaai Alaintha Vealai – Yeasu
Naathan En Pakkamaai Vanthanarae
Paavangal Paarangal Parakka Seithaar – Intha
Paarathil Enai Vettri Sirakka Seithaar

3.Arputhamaam Avar Neasamathu Enthan
Porparan Sevai En Thaagamathu
Parpala Kirubaigal Pagarukintraar – yealai
Karpudan Avar Pani Seithidavae

4.Kaanaanin Karai itho Kaankintratahe – Enthan
Kaathalan Thoni keatkintrathae
Kaalam Ini Illai Unarththiduvom – Virai
Vaaga Nam Oottaththai Mudiththiduvom

5.Alaiththavarai Avar Unmaiyullor Thaam
Alaippathil Vilippudan Niruththa Vallor
Ulaiththiduvom Miga Ookkamudan Angu
Pilaithidavae Anbar Samoogamathil

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version