Aacharyamae Adhisayamae – ஆச்சரியமே அதிசயமே

ஆச்சரியமே அதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்

1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களை நடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே

2. ஏழு மடங்கு எழு நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தனரே

3. பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தம் வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
யேகும் சூரியன் நின்றதுவே

4. மதிலை தாண்டி சேனைக்குள் பாயும்
மாபெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே

5. நம் முதற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார்

Aacharyamae Adhisayamae – ஆச்சரியமே அதிசயமே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version