(சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2
தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்து
மரக்குருசேந்தி நீர் நடந்தீரே
என்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்
சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா.
1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்
அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2
திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”
களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.
சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா.
2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடி
அடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2
மென்மையான கன்னங்களில் உதிரக்கோலம்
தேவனின் ரத்தம் எல்லாம் வற்றிப் போனதே.
சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா
தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்து
மரக்குருசேந்தி நீர் நடந்தீரே
என்தன் தெய்வமே நானல்லவோ
பாவத்தால் சாட்டையடித்தேன்
சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா.