Anantha Gnana Soruba – அனந்த ஞான சொரூபா

பல்லவி

அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!

சரணங்கள்

1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்
காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரே
கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!

2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமை
ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா!

3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே – நரர்க்
கன்பு கூர்ந்தாரே – பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!

4. பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே – எமைப்
பார்க்க வந்தாரே – பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in the which is the fruit of a tree yielding seed; to you it shall be for meat.

ஆதியாகமம் | Genesis: 1: 29

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks