காக்கையை கொண்டு எலியாவை

காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே

என்னையும் போஷிக்க வல்லவரே

மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம்

என்னையும் நடத்த வல்லவரே – 2

நீர் நினைத்தால் யாவரையும் போஷிக்க முடியுமே

நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை…

 

1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு

ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா்

நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம்

என்னையும் போஷிக்க வல்லவரே – நீர் நினைத்தால்….

 

2. கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு

விதவையின் வீட்டாரை போஷித்தீா்

கர்த்தருக்கு முதல் இடம் தந்தால்

கலசத்தில் குறை வில்லையே – நீர் நினைத்தால்…

Contact : 9444609229 David B Kens Tamil Worship Songs

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version