மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

அகமகிழ்ந்து களிகூரு
ஆரவாரம் செய்திடு (2)

1.தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்

2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்

3.தளரவிடாதே உன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்

4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்

https://www.youtube.com/watch?v=L7b5Q-N2E4U

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version