புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe
புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே
நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்தது
காலங்கள் அவரதே நேரங்கள் அவரதே
கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே
நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே
நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம்
நன்றி நன்றி சொல்லி பாடுவோம்
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2
மே காட் பிலெஸ் யு ஆல் -2
பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே
பாலன் இயேசு கரம் நம்மை தாங்குமே
கொஞ்சும் விழி பிள்ளை மொழி
கொள்ளை கொள்ளுமே
அஞ்சிடாமல் வாழ நம்மை பார்த்து சொல்லுமே
தீமையெல்லாம் நன்மையாக மாறிப் போகுமே
தீர்ந்திடாத ஏக்கம் எல்லாம் தீர்ந்து போகுமே
நடந்ததெல்லாம் நல்லதென்று நன்றி சொல்லுவோம்
நடப்பதெல்லாம் நன்மைக்கென்று துணிவு கொள்ளவோம்
தேவன் தந்த இந்த வாழ்வு இன்பமாகுமே
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2
மே காட் பிலெஸ் யு ஆல் -2
கடவுள் தந்த பூமி இது ஒன்னே ஒன்னுதான்
காடு களங்கள் இரண்டும் நம்ம கண்ணும் போல தான்
புல்வெளிகள் மந்தைகளை ஆடையாக்குமே
பள்ளத்தாக்கு தானியத்தால் போர்த்திக் கொள்ளுமே
மரமெல்லாம் சாமி தந்தவரமல்லவா
மழை இல்ல பூமி நம்ம பிழையும் அல்லவா
வருஷமெல்லாம் ஆண்டவரின் நலம் சூழுமே
வளமெல்லாம் ஆண்டவரின் ஆசி ஆகுமே
எல்லாரும் எல்லாமும் பெற்று வாழவே
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2
மே காட் பிலெஸ் யு ஆல் -2
புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே
நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்தது
காலங்கள் அவரதே நேரங்கள் அவரதே
கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே
நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே
நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம்
நன்றி நன்றி சொல்லி பாடுவோம்
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2
மே காட் பிலெஸ் யு ஆல் -2