அழைத்தவர் நீரே
நடத்திச் செல்வீரே
பாதைகள் எதுவானாலும்
முடிவுகள் உமதே – 2 அழைத்தவர் நீரே….
1.சமுத்திரம் வந்தாலும்
பார்வோன் தொடர்ந்தாலும்
முன்பக்கம் பின்பக்கம் முடியாது என்றாலும்
சமுத்திரத்தை பிளந்து
பாதையைத் திறந்து
வழிகளை ஆயத்தமாக்கி
தருபவர் நீரே
அழைத்தவர் நீரே….
2.புயல் காற்று வந்தாலும்
கடல் அலை சீறினாலும்
கடல்மீது நடந்து வந்த இயேசு பார்க்கிறேன்
பயப்படாதே என்கிறார்
கலங்காதே என்கிறார்
கரம் பிடித்தென்னை அவர்
கரை வரை நடத்திச் செல்வார்
அழைத்தவர் நீரே….
3.பசியோ பட்டினியோ
நோயோ கொள்ளை நோயோ
எதுவும் என்னை அணுகாது
உன்னதரின் அடைக்கலத்தில்
வாதை உன் கூடாரத்தை
அணுகாது ஒரு போதும்
சர்வ வல்லவர் உன்னை
பாதுகாப்பாா் தினந்தோறும் – அழைத்தவர் நீரே
————————————————————–
Contact : 9444609229