அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே -2

1.அபிஷேகியும் தேவா
ஆவியின் வல்லமையால் -2
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகியும் தேவா -2

2.தேற்றரவாளனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீர் -2
சாட்சியாய் வாழ்ந்திடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

3.பரலோக அக்கினியே
பலிபீட அக்கினியே -2
பரிசுத்த மாக்கிடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version