சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae

Deal Score0
Deal Score0

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae

நெஞ்சை நெகிழ வைக்கும் புனித வெள்ளி பாடல்

பல்லவி

சிலுவையில் பார்த்ததையே
நானும் சொல்லிட முடியவில்லை
உலுக்கிடும் காட்சியதை
எனக்கு உரைத்திட தெரியவில்லை

சரணம் – 1

சிவப்பு நிறத்திலே
சேவகன் தீட்டிய சித்திரமோ!!!
பாவத்தின் கொடுமையை விளக்கிட
பரமனின் தத்துவமோ !!!
குருதியை கொப்பளித்து
தேங்கும் குளமோ!!!
பெரும் கிணறோ!!!
வீரர் இருப்பாணி (இரும்பாணி) ஈட்டிகளால்
உழுதிட்ட திரு நிலமோ

சிலுவையில் பார்த்ததையே
நானும் சொல்லிட முடியவில்லை
உலுக்கிடும் காட்சியதை
எனக்கு உரைத்திட தெரியவில்லை

சரணம் – 2

சிவப்பு எழுத்திலே
தேவனும் ஆக்கிய புத்தகமோ
கண்ணீர் பொழிந்திட
படித்திட வேண்டும் நித்தமுமே
கொடுமை தீயினிலே
துவளும் உடலோ !!!
உயிரிதுவோ!!!
ஏழை விடுதலைக்காய்
பலியாகும் வீரரின் உருவிதுவோ !!!

சிலுவையில் பார்த்ததையே
நானும் சொல்லிட முடியவில்லை
உலுக்கிடும் காட்சியதை
எனக்கு உரைத்திட தெரியவில்லை

Siluvaiyil paarthathaiyae Good friday song lyrics

    godsmedias
        Tamil Christians songs book
        Logo