Selipaga Matrum song lyrics – செழிப்பாக மாற்றும்

Deal Score0
Deal Score0

Selipaga Matrum song lyrics – செழிப்பாக மாற்றும்

செழிப்பாக மாற்றும் வறண்ட என் வாழ்வை
களிப்பாக மாற்றும் கண்ணீரின் பாதையை-2
‍‌‌
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கர்த்தர் என் வாழ்வின் துணையாளரே – 2

துணிகரமான பாவம் நான் செய்தும்
துணிந்தே உம்மை மறந்திருந்தும் – 2
எனக்காக பரிதவித்த என் கர்த்தர் நீரே
எனக்காக ஜீவன் தந்து மீட்டெடுத்தீர் – 2

என்னை முன்குறித்தீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்
எனக்காக யாவையும் செய்துவிட்டீர் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் எனக்கு தந்து-என்
இரட்டையும் சாம்பலையும் மாற்றிவிட்டீர்-2

Selipaga Matrum song lyrics in english

Selipaga Matrum Varanda En vaalvai
Kalippaga Mattrum Kanneerin Paathaiyai -2

Kalangida Maattean Naan kalangida Maattean
Karthar En Vaalvin Thunaiyalarae -2

Thunikaramana Paavam Naan Seithum
Thunithae Ummai maranthirunthum -2
Enakkaga parithavitha en karthar Neerae
Enakkaga Jeevan thanthu Meettedutheer -2

Ennai munkuritheer Ennai thearnthedutheer
Enakkga Yaavaiyum Seithuvitteer-2
Ratchippin Vasthiram Enakku thanthu En
Erattaiyum Saambalaiyum Mattrivitteer -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo