Seeyon Aandavar Irangi Varukintraar song lyrics – சீயோன் ஆண்டவர் இறங்கி வருகின்றார்
Seeyon Aandavar Irangi Varukintraar song lyrics – சீயோன் ஆண்டவர் இறங்கி வருகின்றார்
சீயோன் ஆண்டவர் இறங்கி வருகின்றார்
நன்றிப்பலி செலுத்திட நம்மை அழைக்கின்றார்
கடந்த வாழ்வில் நடந்த நன்மை யாவும் நினைந்து
நன்றிப் பலி செலுத்திட இன்று அழைக்கின்றார்
ஆண்டவர் எவ்வளவு நல்லவர்
சுவைத்த பொழுதை மகிழ்ச்சிப் பொங்கப் பாடுவோம்
அச்சம் கொண்ட வேளையில் மார்பில் அணைத்த இறைவனை
நினைந்து நன்றி சொல்லுவோம்
இறைவன் விரும்பும் பலியை எழுந்து நின்று நாமும்
இனிதே செலுத்திடுவோம்
ஆண்டவர் கருணை கொண்டவர்
சாயல் தந்து ஆயுள் முழுதும் காப்பவர்
பாவம் என்ற புதரினில் பதுங்கிக் கிடக்கும் நம்மையே
புதுப்படைப்பாய் மாற்றி மகிழ்பவர்
இந்தக் கருணை நினைந்து நன்றி சொல்லி நாமும்
இறைவனை வரவேற்போம்
Varugai Padal in Tamil